"சசிகலாவை முதலமைச்சராக்க கவர்னர் ஏன் லேட் பண்ணுகிறார்…???" - சு.சுவாமி கேள்வி…

 
Published : Feb 10, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"சசிகலாவை முதலமைச்சராக்க கவர்னர் ஏன் லேட் பண்ணுகிறார்…???" - சு.சுவாமி கேள்வி…

சுருக்கம்

சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர்  அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் காத்திருப்பது ஏன்? என்றும் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவர் முதலமைச்சராக பதவி ஏற்க  தயாராக உள்ளார். ஆனால் அவருக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ள ஓபிஎஸ், தனக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும் தான் முதலமைச்சராக நீடிப்பேன் என்றும்  கூறிவருகிறார்.

இதனிடையே நேற்று ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்த ஓபிஎஸ் தனது தலைமையில் ஆட்சி தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் புடைசூழ ஆளுநரைச் சந்தித்த சசிகலா தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏ க்களின் பட்டியல் மற்றும் அவர்களது ஆதரவு கடிதங்களையும் கொடுத்தார். இது குறித்து ஆளுநர் விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி , தனக்கு உள்ள ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை சசிகலா கவர்னரிடம் அளித்துள்ளார். அதில் அவருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது.

ஆனால் பன்னீர்செல்வம் தனக்கு உள்ள ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பட்டியல் தரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெரும்பான்மை பலம் இருப்பதால் ஆட்சியமைக்க சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் . சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் காத்திருப்பது ஏன்? எனவும் சு,சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆளுநர் இதற்கு காலம் தாழ்த்துகிறாரா எனவும் சு.சுவாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு