
சசிகலா பதவி ஏற்பு இப்போதைக்கு இல்லை என்று சூசகமாக கவர்னர் சார்பில் உணர்த்தப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றாண்டுவிழா ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு , அதில் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து முதல்வர் ஓபிஎஸ் ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் ஜோஷியர் குறித்து கொடுத்த நாள் படி பிப் 7 அன்று சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மின்னல் வேகத்தில் வேலைகள் நடந்தது. சென்னை வாலாஜா சாலை பல்கலை கழக நூற்றாண்டு விழா மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டது வேக வேகமாக தயார் ஆனது.
மறுபுறம் அழைப்பிதழ்கள் ரெடியானது. ஒரு நாளைக்குள் அனைத்து ஏற்பாடுகளும் மின்னல் வேகத்தில்நடந்தது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அமைச்சர்கள் , பொதுப்பணி மற்றும் பிற துறை அதிகாரிகள் மேற்பார்வையில் வேலைகள் வேகமாக நடந்தது.
ஆனால் கவர்னர் சென்னை திரும்பாததால் எல்லாம் தள்ளிபோனது. இதற்கிடையே 7 ஆம் தேதி இரவு ஓபிஎஸ் திடீரென அளித்த பேட்டி அரசியலை புரட்டி போட்டது. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களில் சிலரும் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் என ஓபிஎஸ்சுக்கு ஆதரவு அதிகரித்தது.
மறுபுறம் கவர்னரும் சென்னை திரும்பவில்லை. எம்.எல்.ஏக்களை தனியாக மொத்தமாக ஒரு இடத்தில் தங்க வைத்தது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பாரா கவர்னர் அதற்கு அழைப்பு விடுப்பாரா என்ற நிலையில் நேற்று சென்னை வந்த கவர்னர் சசிகலாவிடம் கோரிக்கை கடிதத்தை பெற்றார்.
ஓபிஎஸ்சிடமும் கடிதம் பெற்றார். ஆனால் ஆட்சிப்பொறுப்பேற்க சசிகலாவை பதவி ஏற்க அழைக்கவில்லை . இந்நிலையில் திடீரென பதவி ஏற்க இருந்த பல்கலை கழக நூற்றாண்டு விழா போலீஸ் காவல் திரும்ப பெற அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆகவே தற்போதைக்கு பதவி ஏற்பு இல்லை என தெரிகிறது. இதுவும் சசிகலா தரப்புக்கு பின்னடைவாக தெரிகிறது.