
ரஜினி இலங்கை செல்வதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் சார்பில் அங்குள்ள வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் 150 வீடுகள் கட்டப்பட்டன. இவை அங்கு வாழும் தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி ஏப்ரல் 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது..
இதற்கிடையே லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 2.0 திரைப்படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த், வீடுகள் வழங்கும் திட்டத்தில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியானது. இதற்கிடையே இந்நிகழ்சியில் கலந்து கொண்டு தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ரஜினி இலங்கை செல்வதற்கு, சுப்ரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் 'எதிர்ப்புகளை மீறி ரஜினிகாந்த் இலங்கை சென்றால், அவரை நிச்சயம் பாராட்டலாம்' என்று கூறியுள்ளார்.