வெங்காய விலை கட்டுக்குள் வருமா..? அதற்கு நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியணுமே... சுப்பிரமணிய சுவாமி நக்கல்!

By Asianet TamilFirst Published Dec 8, 2019, 7:36 PM IST
Highlights

வெங்காய விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டைப் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து நான் வந்திருக்கிறேன். அதனால், அதன் விலை பற்றி கவலையில்லை” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன. இந்நிலையில் நிர்மலா சீதாராமனை அவருடைய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரணியசுவாமி  தன் பங்குக்கு கலாய்த்திருக்கிறார்.
 

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியணுமே என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.
 நாட்டில்  வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதால், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி வெங்காயம் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை அரசு இறக்குமதி செய்துவருகிறது. வெங்காயத்தின் விலை உயர்வு நாடாளுமன்றத்தை விட்டுவைக்கவில்லை. வெங்காயம் விலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்துவருகின்றன.


 இந்நிலையில், வெங்காய விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டைப் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து நான் வந்திருக்கிறேன். அதனால், அதன் விலை பற்றி கவலையில்லை” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன. இந்நிலையில் நிர்மலா சீதாராமனை அவருடைய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரணியசுவாமி  தன் பங்குக்கு கலாய்த்திருக்கிறார்.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி, “வெங்காய விலை உயர்வு நம்முடைய தோல்விதான் காரணம். சரியான பொருளாதார கொள்கைப் பின்பற்றவில்லை. ஏற்கனவே நாட்டு மக்களின் கையில் பணம் இல்லை. வருமான வரியை முழுமையாக ரத்து செய்தால்தான் பொருளாதர பிரச்னை தீரும்” எனத் தெரிவித்தார். 
வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் சுப்பிரமணியசுவாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சாமி, “இந்தக் கேள்வியை நிர்மலா சீதாராமனிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியணுமே?” என நக்கலாக பதில் அளித்தார்.

click me!