மொக்க பங்களாக்களில் அவதிப்படும் மத்தியமைச்சர்கள்!: மழை பெஞ்சா ஒழுகுது, வெயிலடிச்சா உடையுது.

By Vishnu PriyaFirst Published Dec 8, 2019, 6:14 PM IST
Highlights

டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் வசிக்கும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்தியமைச்சர்களின் அரசு பங்களாக்கள் மோசமாக உள்ளனவாம். மழை காலங்களில் வீட்டினுள் ஒழுக்கு இருப்பதோடு, மழை இல்லாத நேரங்களில் தண்ணீர் டேங்கிலிருந்து ஒழுகல் இருக்கிறதாம். பல இடங்களில் சிமெண்ட் பெயர்ந்து, விழுந்து கொண்டிருக்கிறதாம். இப்படியான வீடுகளில் அவதிப்படுவோரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வீடும் ஒன்றாம்.

* நவீன மின்னணு போர் (எலெக்ட்ரானிக் வார்) எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதால் ராணுவ வீரர்கள் கவனமாக இருப்பது அவசியம். குறிப்பாக வாட்ஸ்-ஆப், கம்ப்யூட்டர் உள்ளீட்ட நவீன எலெக்ட்ரானிக்ஸ் மூலம் நடக்கும் பரிமாற்றங்களில் கவனம் தேவை!-    ராணுவ கமாண்டண்ட் பிரிகேடியர் சூரையா

* அஞ்சி நடுங்கி ஓரமாக இருந்தவர்கள், இன்றைக்கு பகிரங்கமாக பேசக்கூடிய நிலைக்கு வந்துள்ளனர். ‘ஒரே நாடு! ஒரே மொழி’ என, பேசுகின்றனர். ஒரே வரியை கொண்டு வந்துவிட்டனர். ஒரே தேர்தல் என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தியபடி உள்ளனர். -இரா.முத்தரசன்

*வரலாற்று சிறப்பு மிக தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. ஜனநாயகத்தை காக்க கூடிய வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது தி.மு.க.வின் கோரிக்கையை புரிந்து, தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். -மு.க.ஸ்டாலின்

* திருப்பூர் கலெக்டரான விஜய கார்த்திகேயன், தெலுங்கானாவில் கற்பழிப்பு, கொலை குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ‘சும்மாகிழி! ஜஸ்டிஸ் ஃபார் திஷா’ என்று ரஜினி பாடலை குறிப்பிட்டு டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். இதற்கு ஆதரவும், விமர்சனமும் ஒரு சேர எழுந்துள்ளது. -பத்திரிக்கை செய்தி

* தர்பார் படத்தின் ஆதித்யா அருணாசலம் கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லானது. நான் இதுவரையில் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும். சந்திரமுகி படத்தை விட இப்போதுதான் நயன் தாரா உற்சாகமாக இருக்கிறார். -ரஜினிகாந்த்

* ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்! என்கிற நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்த பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயத்தால்தான் நீதிமன்றத்தை தி.மு.க. நாடியது. இப்போது மட்டுமல்ல 2016லும் அக்கட்சிதான் தேர்தலை நிறுத்தியது. -    எடப்பாடி பழனிசாமி

* தெலுங்கானா கால்நடை மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்து, கொல்லப்பட்டுள்ளனர். இது நியாயமான முடிவு என்றே தோன்றும். இதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருந்தால், தவறு செய்ய நினைப்போருக்கு பயம் ஏற்படும். -    கனிமொழி. 

* சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்தபோது நான் பார்த்து வியந்தது அந்நாட்டு மக்களின் மனநிலையைதான். அவர்களுக்கு எது சரியென படுகிறதோ, அதை தைரியமாக செய்கின்றனர். பிறரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, அதனால்தான் அந்நாடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. - ஓ.பன்னீர் செல்வம்

* நான் கட்சி துவங்கி, சிறப்பாக நடத்தி வந்தேன். அதை திசை திருப்பும் விதத்தில், எங்களை, அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்கிறோம்!ன் என்றனர். எனினும் இதுவரை இணைக்கவேயில்லை. தேர்தல் நேரங்களில் மட்டுமே இணைப்பு பற்றி பேசுகின்றனர். அதன் பிறகு எதுவுமே செய்வதில்லை. - தீபா 

* டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் வசிக்கும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்தியமைச்சர்களின் அரசு பங்களாக்கள் மோசமாக உள்ளனவாம். மழை காலங்களில் வீட்டினுள் ஒழுக்கு இருப்பதோடு, மழை இல்லாத நேரங்களில் தண்ணீர் டேங்கிலிருந்து ஒழுகல் இருக்கிறதாம். பல இடங்களில் சிமெண்ட் பெயர்ந்து, விழுந்து கொண்டிருக்கிறதாம். இப்படியான வீடுகளில் அவதிப்படுவோரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வீடும் ஒன்றாம். -பத்திரிக்கை செய்தி

click me!