
தமிழக அரசியல் இரண்டாக பிளவு பட்டு சசிகலா ஒரு அணியாகவும் பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே பன்னீர்செல்வமும் சசிகலாவும் ஆளுனரை நேரில் சந்தித்து தமது கோரிக்கைகளை ஏற்கனவே முன் வைத்துள்ளனர்.
இருந்தும் ஆளுநர் சசிகலாவை பதவியேற்க அழைப்பு விடுக்கவில்லை.
தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநருடன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும்பான்மையான அதரவு சசிகலாவுக்கு உள்ளதால் அவரை அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.
30 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஆளுநர் சசிகலாவுக்கு சாதகமாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுனரை சந்தித்துவிட்டு புறப்பட்ட சுப்ரமணிய சுவாமி முன்வாசலில் செய்தியாளர்கள் கூடியிருந்தமையால் பின்வாசல் வழியாக சென்றுவிட்டார்.