“ஜெ,விடம் யாரையும் அனுமதிக்கவில்லை சசிகலா!!” – சவுண்ட் பொன்னையன் ‘பகீர்’ தகவல்

 
Published : Feb 11, 2017, 06:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“ஜெ,விடம் யாரையும் அனுமதிக்கவில்லை சசிகலா!!” – சவுண்ட் பொன்னையன் ‘பகீர்’ தகவல்

சுருக்கம்

அதிமுகவின் அமைப்பு செயலாளர்களில் ஒருவராக இருந்த பொன்னையன் திடீரென முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொன்னையன் மாலை 5.10 மணிக்கு ஓ.பி.எஸ் வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்த போது  தொண்டர்கள் விசில் அடித்து கர ஒலி எழுப்பி வரவேற்றனர்.

இதையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், கழக தொண்டர்களின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கே உள்ளது எனவும் நல்ல தலைமையின் கீழ் அதிமுக இயங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை சசிகலா தவிர யாரும் சந்திக்கவில்லை என தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் எனவும்  பன்னீர்செல்வத்தை அதிமுகவினர் ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதாவால் முதலமைச்சராக அடையாளம் காட்டபட்டபட்டவர் பன்னீர்செல்வம் எனவும், அண்ணாவை போல் அடக்கத்தோடு பணியாற்றுபர் எனவும் புகழாரம் சூட்டினார்.

வலைதளங்களில் பொதுமக்கள் தரும் கருத்துக்கு மதிப்பு தர வேண்டும் எனவும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் செயல்படுபவர் பன்னீர்செல்வம்.

ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றிய பெருமையும் பன்னீர்செல்வத்தையே சாரும் எனவும் தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் எனவும் பொன்னையன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு