
முதன் முறையாக “சசிகலா” என்றழைத்த பொன்னையன்....!! பேட்டியின் ஆரம்பமே அதிரடி ....!!!
ஒபிஎஸ்
அதிமுக கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டு , பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் , சசிகலா ஒரு அணியாகவும் பிரிந்தது. பின்னர் சசிகலா அணியில் பெரும்பாலான எம் எல் ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். பின்னர் நேரம் செல்ல செல்ல , பன்னீர் அணிக்கு ன் ஒவ்வொருவராக மாற ஆரம்பித்தனர்.
அணி மாற்றம் :
கோவை கவுண்டம்பாளையம் எம் எல் ஏ ஆறுக்குட்டி ஆரம்பித்து , மனோகரன், மனோரஞ்சிதம், மாணிக்கம், என பன்னீருக்கு ஆதரவு எம் எல் ஏக்கள் அதிகரிக்க தொடங்கினர். இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மது சூதனனே நேற்று , பன்னீர் அணிக்கு மாறினார் . பின்னர் மாபா பாண்டியராஜனும் பன்னீர் அணிக்கு தாவினார்
பொன்னையன்
இந்நிலையில், எப்பொழுதும் கட்சிக்காக கொஞ்சம் சவுண்டு கொடுக்கும் பொன்னையன் அவர்கள், இன்று மாலை வரை தாக்குப்பிடித்து விட்டு, ஒரு கட்டத்தில் முடியாமல் பன்னீர் அணிக்கு திடீரென தாவியதால், முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு மேலும் பலம் கூடியது.
“சசிகலா” என்றழைத்த பொன்னையன்....!!
பன்னீருக்கு அதரவு தெரிவித்த பேசிய பொன்னையன் , தான் பேச தொடங்கும் போதே, சின்னம்மா என கூறாமல், முதன் முறையாக சசிகலா என அழைத்து பேசி, தன் பேட்டியை செய்தியாளர்களிடம் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.