பட்டய கிளப்பும் பன்னீர் .....!!! 90%  எம்எல்ஏக்கள் ஒபிஎஸ்கு ஆதரவு....பொன்னையன் வாக்கால் குஷியோ  குஷி....!! 

 
Published : Feb 11, 2017, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
பட்டய கிளப்பும் பன்னீர் .....!!! 90%  எம்எல்ஏக்கள் ஒபிஎஸ்கு ஆதரவு....பொன்னையன் வாக்கால் குஷியோ  குஷி....!! 

சுருக்கம்

 பட்டய கிளப்பும் பன்னீர் .....!!! 90%  எம்எல்ஏக்கள் ஒபிஎஸ்கு ஆதரவு....பொன்னையன் வாக்கால் குஷியோ  குஷி....!! 

ஒபிஎஸ்

அதிமுக  கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டு , பன்னீர்  செல்வம் ஒரு அணியாகவும் ,  சசிகலா   ஒரு அணியாகவும்  பிரிந்தது.  பின்னர்  சசிகலா  அணியில் பெரும்பாலான  எம் எல் ஏக்கள்  ஆதரவு  தெரிவித்து வந்தனர். பின்னர்  நேரம் செல்ல செல்ல , பன்னீர்  அணிக்கு  ஒவ்வொருவராக  மாற  ஆரம்பித்தனர்.

அணி மாற்றம் :

கோவை  கவுண்டம்பாளையம்  எம் எல் ஏ ஆறுக்குட்டி  ஆரம்பித்து ,  மனோகரன், மனோரஞ்சிதம், மாணிக்கம்,  என  பன்னீருக்கு  ஆதரவு  எம் எல் ஏக்கள்  அதிகரிக்க  தொடங்கினர். இந்நிலையில்  அதிமுக  அவைத்தலைவர்  மது சூதனனே நேற்று ,  பன்னீர்  அணிக்கு  மாறினார் . பின்னர்  மாபா  பாண்டியராஜனும் பன்னீர்  அணிக்கு  தாவினார்

பொன்னையன் :

இந்நிலையில்,  எப்பொழுதும்  கட்சிக்காக  கொஞ்சம் சவுண்டு  கொடுக்கும்  பொன்னையன்  அவர்கள்,  இன்று மாலை  வரை  தாக்குப்பிடித்து விட்டு,  ஒரு கட்டத்தில்  முடியாமல் பன்னீர்  அணிக்கு  திடீரென  தாவியதால், முதல்வர்  பன்னீர்  செல்வத்திற்கு மேலும்  பலம்  கூடியது.

பொன்னையன் கருத்தால் குஷி :

தற்போது , பன்னீர்  அணிக்கு  தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து பொன்னையன்  ஆதரவு  தெரிவித்தார்.  அப்போது  பேசிய அவர், 90% எம்எல்ஏக்களின் ஆதரவு ஓபிஎஸ்க்கு உண்டு என தெரிவித்தார் இதனால்,  முதல்வர் பன்னீர்   செல்வம் அணிக்கு பலம் கூடியது மட்டுமல்லாது, பன்னீரும்  ஒரே குஷியாக உள்ளார் .  

20 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வரத் தயார் - மாஃபா பாண்டியராஜன்

இந்நிலையில்,  மீண்டும் 20 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வரத் தயார் என , மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளதால்  முதல்வர் அணி மேலும்  வலுப் பெறுகிறது  என்பது  குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், பன்னீர்  அணியினர்  குஷியோ குஷியில் உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு