
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர் என அழைக்கப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஆடிட்டரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான குருமூர்த்தி, ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு நான் ஆலோசகராக இல்லை என்றும் ரஜினிக்கு நான் ஆலோசகராக இருந்தால் பெருமை அடைவேன் என்று கூறியிருந்தார். நேற்று செய்தியாளர்களிட பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், ரஜினி, கமலிடம் அரசியல் பேசுவேன் தவிர ஆலோசகர் அல்ல என்றார். காவிரி தேர்தலுக்குப்பின் காவிரி மேலாண்மை வாரியம் திட்ட வரைவு தாக்கல் தேதி அறிவிப்பதே நல்லது என்று கூறினார். காவிரி வழக்கில் வழங்கப்பட்ட 600 பக்க தீர்ப்பை படிக்காமலேயே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அவர் குற்ற்ம சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி திறமை, ரஜினிக்கான மக்கள் ஆதரவு இவை கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தியின் பேட்டி குறித்து, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், குருமூர்த்தி ஆடிட்டர், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர் என்று அழைக்கிறார்கள். ஆனால், அவரை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் எந்தப்பதவியிலும் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி அதில் பதிவிட்டுள்ளார்.