ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகக்கூடாது...! - அமைச்சர் ஜெயக்குமார்

Asianet News Tamil  
Published : May 10, 2018, 03:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகக்கூடாது...! - அமைச்சர் ஜெயக்குமார்

சுருக்கம்

Minister Jayakumar Pressmeet

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததுபோல், ரஜினியை குருமூர்த்தி கெடுக்கக் கூடாது என்றும், தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும் எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு நான் ஆலோசகராக இல்லை. ரஜினிக்கு நான் ஆலோசகராக இருந்தால் நான் பெருமை அடைவேன் என்று கூறினார். ரஜினி, கமலிடம் அரசியல் பேசுவேன் தவிர ஆலோசகர் அல்ல என்று கூறியிருந்தார். 

மேலும் பேசிய அவர், காவிரி தேர்தலுக்குப்பின் காவிரி மேலாண்மை வாரியம் திட்ட வரைவு தாக்கல் தேதி அறிவிப்பதே நல்லது என்று கூறினார். காவிரி வழக்கில் வழங்கப்பட்ட 600 பக்க தீர்ப்பை படிக்காமலேயே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அவர் குற்ற்ம சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி திறமை, ரஜினிக்கான மக்கள் ஆதரவு இவை கூறியிருந்தார்.

இந்த நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகக் கூடாது என்றார்.

குருமூர்த்தி முதலில் பட்ஜெட்டை படிக்க வேண்டும். அதன்பிறகு அவர் பேச வேண்டும். தமிழகத்தில் வெற்றிடம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த தேர்தல் வந்தாலும், அதிமுகதான் வெற்றி பெறும் என்றார்.

மேலும், சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தது போல், ரஜினியை குருமூர்த்தி கெடுக்கக் கூடாது. காமாலைக்காரனுக்கு எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். காவிரி தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று அமைச்ச்ர ஜெயக்குமார் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை முடக்க செந்தில் பாலாஜிக்கு பொறி... பரம எதிரியை டெல்லிக்கு அழைத்து சென்ற இபிஎஸ்... அமித் ஷா போடும் ப்ளான்
எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்..! திமுக கூட்டணியில் இருந்துகொண்டே இபிஎஸ்ஐ புகழ்ந்து பேசிய வேல்முருகன்