சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சபாநாயகர் பதவி... ஓவர் ஸ்பீடில் திமுகவில் திகுதிகு காட்சி..!

By Asianet TamilFirst Published Apr 13, 2021, 9:15 PM IST
Highlights

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால், அந்தக் கட்சியின் சீனியர் தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சபாநாயகராக்கப்படுவார் என்று திமுகவில் பரபரப்பான தகவல்கள் உலா வருகின்றன.
 

தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பது அறிய காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், முடிவை அறிய அதுவரை அரசியல் கட்சிகள் பொருத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், தேர்தலுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்புகளில் எல்லாம் திமுக ஆட்சியைக் கைபற்றும் என்று தெரிவித்தன. திமுகவுக்காகப் பணியாற்றிய ஐ-பேக் அமைப்பும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று திமுக தலைமையிடம் ரிப்போர்ட் வழங்கியுள்ளது.
எனவே, தேர்தலில் எப்படியும் 180-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்வோம் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது. அதற்கும் ஒரு படி மேலே சென்று, திமுக ஆட்சியில் அமைச்சர்கள் யார், துறை செயலாளர்கள் யார் என்றெல்லாம் ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் பரபரக்கின்றன. அந்த வகையில் திமுக ஆட்சி அமைந்தால், சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து திமுக தலைமை ஆலோசனை நடத்தியதாகவும், மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்றும் திமுகவில் பேச்சுகள் தீவிரமாக பேசப்படுகின்றன.
மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து பாஜக களமிறங்கியது. மிகவும் சீனியரான சுப்புலட்சுமி, இந்தத் தொகுதியில் சுலபமாக வெல்வார் என்று திமுக நம்புகிறது. எனவே, சுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழகத்தின் முதல் சபாநாயகராவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் உறுதிப்பட கூறுகிறார்கள். எது எப்படி இருந்தாலும், மே 2-க்குப் பிறகு இதற்கு விடை கிடைத்துவிடப் போகிறது..! 
 

click me!