திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்! - அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

Published : Sep 20, 2022, 09:29 AM ISTUpdated : Sep 20, 2022, 01:15 PM IST
திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்! -  அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

சுருக்கம்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்கடிக்கப்பட்டார். தேர்தல் தோல்வின்னு ஈரோடு மாவட்ட முக்கிய புள்ளி மற்றும் திமுக நிர்வாகிகள் செய்த சதி செயலே காரணம்.  இது தொடர்பாக, மாவட்ட முக்கிய புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் அளித்தார்.

கட்சி மேலிடம்  மீதான அதிருப்தியின் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்கடிக்கப்பட்டார். தேர்தல் தோல்வின்னு ஈரோடு மாவட்ட முக்கிய புள்ளி மற்றும் திமுக நிர்வாகிகள் செய்த சதி செயலே காரணம்.  இது தொடர்பாக, மாவட்ட முக்கிய புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் அளித்தார்.

இதையும் படிங்க;- திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறை எது..? ரூ. 1 கோடி பரிசு...ஸ்டாலினை அதிரவைத்த மாஜி அமைச்சரின் கணவர்

ஆனால், அந்த கடிதத்தை மு.க.ஸ்டாலின் கண்டுக்கொள்ளவில்லை. தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையாவது திமுக தலைமை தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில், சுப்புலட்சுமி ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதனால், சுப்புலட்சுமி ஜெகதீசன் கடும் அதிருப்தி அடைந்தார். 

இந்நிலையில், சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன் முகநூலில் சில நாட்களுக்கு முன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது திமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்தது. அதிருப்தியில் இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன் எப்போது வேண்டுமானாலும் திமுகவில் கட்சியில் இருந்து விலகலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்வதாக அததிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல். கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின், அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று. அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு. அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- ஆ.ராசாவை கைவிட்ட திமுக.!ஆதரவாக சீமானை தொடர்ந்து களத்தில் இறங்கிய வேல்முருகன்.. இந்து அமைப்புகளுக்கு எச்சரிக்கை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!