
உடல்நலன் காரணத்தால் லட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகுவதாக தான் கூறியுள்ளாரே தவிர அவர் பாஜகவில் இணையப் போவதாக கூறவில்லை என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். உடல்நலன் காரணத்தால் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார் அதை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான விலகல் கடிதத்தையும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். தற்போது இவரது விலகல் திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படியுங்கள்: தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.. அண்ணாமலை வைத்த உருக்கமான வேண்டுகோள்.
அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- திமுகவின் சட்ட திட்டங்களின் படி திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் மகளிர் ஆகவும் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது விதி.
இந்த ஆண்டு தேர்தல் முடிவுக்கு வரவுள்ளது, பொதுச்செயலாளர் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வர உள்ளது, அதற்கான அறிவிப்புக்குப் பிறகு புதிய சட்ட திட்ட விதிப்படி துணை பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர், திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் இரண்டு பேர் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்களே என செய்கிறார்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒருவர் உடல்நல குறைவு காரணமாக விலகி இருக்கிறார், மற்றொருவர் அரசியல்ரீதியாக விலகியுள்ளார், இது ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லை என்றார்.
இதையும் படியுங்கள்: 1000 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்” : அதிரடி காட்டும் ராமராஜன்
தற்போது துணை பொதுச்செயலாளர்கள் ஐந்து பேர் இருக்கிறோம் தேவைப்பட்டால் அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்த டிகேஎஸ் இளங்கோவன் உடல்நலன் காரணத்தால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர பாஜகவில் இணைய போகிறேன் என்று கூறவில்லை , அதேபோல் பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை என்றும், அவர்கள் உடல்நிலையை காரணமாக கூறியிருக்கிறார் எனவே கட்சி அதை ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அது முற்றிலும் தவறான தகவல், கடந்த மாதம் திமுக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொண்டார் என்றார். எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறினார்.
அந்தளவுக்கு சிறப்பாக சட்ட ஒழுங்கை பாதுகாத்த அவர், எங்களைப் பார்த்து இப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என்றார். அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்து இப்போதுதான் சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்தார்.