தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.. அண்ணாமலை வைத்த உருக்கமான வேண்டுகோள்.

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2022, 3:29 PM IST
Highlights

புதிய தொற்றுநோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு  வழி வகை செய்ய வேண்டும் என்றும், நாம் அனைவரும் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

புதிய தொற்றுநோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு  வழி வகை செய்ய வேண்டும் என்றும், நாம் அனைவரும் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

 H1, N1 இன்ப்ளுவன்சா  வைரஸ் பரவல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதையும் படியுங்கள்: “அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை கடலில் மூழ்கும்.. வெளியான பகீர் தகவல்” - சென்னைவாசிகள் அதிர்ச்சி!

பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது, இன்புளுவன்சா H1, N1 வைரஸ் பாதிப்பினால் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படாத வகையில் உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,

இதையும் படியுங்கள்: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யகோரிய மனு.. SP.வேலுமணிக்கு சரியான ஆப்பு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

வைரஸ் H1, N1 இன்ப்ளுவன்சா பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும், H1, N1 இன்ப்ளுவன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளில் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்,

நோய் பரவலை தடுப்பதற்கு மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டு பரஸ்பரம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கவனத்தை ஈர்க்க மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன், அனைவரும் இணைந்து அரசுடன் இணைந்து புதிய வைரஸ் தாக்குதலை முறியடிப்போம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
 

click me!