எச்.ராஜாவை கலாய்த்து கமாண்ட்ஸ் போட்ட வாலிபர் கைது... ஐந்தே மணி நேரத்தில் அசால்ட்டா தூக்கிய போலிஸ்!

 
Published : Jun 18, 2018, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
எச்.ராஜாவை கலாய்த்து கமாண்ட்ஸ் போட்ட வாலிபர் கைது... ஐந்தே மணி நேரத்தில் அசால்ட்டா தூக்கிய போலிஸ்!

சுருக்கம்

sub editor arrested criticizing h raja

எச்.ராஜாவை கலாய்த்து முகநூளில் பதிவிட்ட  போட்ட மாலை முரசு தொலைக்காட்சியின் சப் எடிட்டர் நூருல் அகமது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள மீன் சந்தையால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி அந்த மீன் சந்தையை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.  இந்த போராட்டமானது தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் 20 ந் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம்  நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்பை பார்த்த மாலை முரசு தொலைக்காட்சியின் சப் எடிட்டர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த  ஜகுபர் அலி மகன் நூருல் அகமது என்ற இளைஞர் தனது முகநூலில்,  “சாகும்வரை உண்ணாவிரதமா? இல்லை சாக்கு போக்கு சொல்லி முடிப்பார்களா?” என ஹெச்.ராஜாவை கலாய்த்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த முத்துப்பேட்டை பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் இன்று அதிராம்பட்டிணம் வந்த நூருல் அகமதுவை முத்துப்பேட்டை போலிசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.  பாஜக பிரமுகரை கலாய்தத்தால் இளைஞரை கைது செய்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!