முதலமைச்சர் நிகழ்ச்சியில் மாணவர்கள் போராட்டம்! "அடிப்படை வசதியில்லை"... ஆனால் லட்சக்கணக்கில் கொண்டாட்டமா?

By thenmozhi gFirst Published Sep 7, 2018, 6:13 PM IST
Highlights

அடிப்படை வசதியில்லை... லட்சக்கணக்கில் கொண்டாட்டமா? முதலமைச்சர் நிகழ்ச்சியில் மாணவர்கள் போராட்டம்!

அடிப்படை வசதியில்லை... லட்சக்கணக்கில் கொண்டாட்டமா? முதலமைச்சர் நிகழ்ச்சியில் மாணவர்கள் போராட்டம்!

சென்னை பல்கலைக்கழக வைர விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசு, கல்விக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து வருவதாகவும், மாணவர் நலன்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய சராசரியைவிட அதிகம் என்றும், மாணவர் சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் கூறினார். மாணவர்கள் வன்முறைகளைத் தவிர்த்து சமுதாய பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராத சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கொண்டாட்டங்கள் தேவையா? என்று அவர்கள் போராடினர். 

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியில்லை. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு மினரல் வாட்டர் வழங்கப்படுகிறது. முறையான கழிப்பறை வசதிகள் இல்லை. மாணவிகளுக்கு நாப்கின் வசதியில்லை. இது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அடிப்படை வசதி செய்து தராத நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் கொண்டாட்டங்கள் தேவையா என்று கூறினார்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

click me!