அபிராமிக்கு ஜாமீன் கேட்கவே மாட்டோம்.... வெறுத்துப் போன குடும்பத்தினர்!

By sathish kFirst Published Sep 7, 2018, 3:37 PM IST
Highlights

கண்ணை மறைத்த காமவெறியால் இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் செயல்  தமிழகத்தையே அதிரவைத்துள்ளது .  இப்படி கொடுராமாக எனது பேரக் குழந்தைகளை அவளுக்கு நாங்கள் எப்போதுமே ஜாமீன் கேட்கப்போவதில்லை என அபிராமியின் தந்தை கண்ணீருடன் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கள்ளக்காதலனின் பேச்சை கேட்டு தான் பெற்ற குழந்தைகளை தாயே கொலை கொடூரம், இன்றளவும் நம்ப முடியாத செய்தியாகவே இருக்கிறது. இந்த கொடூரத்தை நிகழ்த்திய அபிராமி தற்போது சிறையில் இருக்கிறார். அபிராமியின் செயலால் அவரது கணவரும் பெற்றோரும் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். மகளின் செயலால் பேரப்பிள்ளைகளை இழந்து தவித்து வரும் அபிராமியின் அப்பா சவுந்தரராஜன் அபிராமிக்காக ஜாமீன் கேட்க போவதில்லை என ஆவேசமாக தெரிவித்திருக்கிறார். 

அபிராமி ஜெயிலில் இருப்பது அவள் செய்த தவறுக்கான தண்டனை. 8 ஆண்டுகளுக்கு முன்னர் அவள் விஜயை காதலிப்பதாக சொன்னபோது, அவளுக்கு விஜய்க்கு திருமணம் செய்து வைத்தோம். விஜயின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்காத நிலையில் , அவர்கள் தனித்து வாழ்ந்து வந்தனர். அபிராமியை நல்ல முறையில் வாழவைக்க விஜய் கஷ்டப்பட்டு உழைத்தார். இரண்டு குழந்தைகள் அழகான குடும்பம் என்று அவர்களின் வாழ்க்கையும் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் கூட அபிராமிக்கு மேக்கப் செய்வதில் இருந்த ஆர்வம் குறையவில்லை. விஜய் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் மேக்கப் செய்வது, ஹோட்டல்களி சென்று சாப்பிடுவது என சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். அவள் பிறந்தநாள் அன்று விஜய் அவளுக்கு பரிசளித்த ஸ்கூட்டியை கூட ஊர் சுற்ற தான் அதிகம் பயன்படுத்தினாள்.

சுந்தரம் விஷயத்தில் அவளது போக்கு தவறு என பல முறை அவளுக்கு அறிவுரை கூறி இருக்கிறேன். அவள் அதை கேட்டதே இல்லை. இந்த கொடூரம் நிகழ்வதுக்கு முன் கூட சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று இரண்டு நாட்கள் அங்கேயே தங்கிவிட்டாள். தாயில்லாமல் தவித்த பிள்ளைகள் பற்றி கூட அவள் நினைத்து பார்க்கவில்லை. நான் தான் அவளை அடித்து திட்டி மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தேன்.

அப்போதே போலீசிடம் போயிருந்தால் கூட என் பேரப்பிள்ளைகள் இன்று உயிருடன் இருந்திருக்குமே! இப்போது கூட அவர்கள் என்னை தாத்தா என அழைப்பது தான் கேட்டு கொண்டிருக்கிறது. என அழுது புலம்பி இருக்கிறார்.
மேலும் தன் பேரப்பிள்ளைகளை கொன்ற அபிராமிக்கு தண்டனை தேவைதான். அவளுக்காக நான் ஜாமீன் ஒருபோதும் கேட்க மாட்டேன் என்றும் சவுந்தரராஜன் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

click me!