
வகுப்பறைக்குள் நுழைந்து இரண்டு மாணவிகளின் ஆடைகளை கழற்றி அவர்களின் கண்ணெதிரில் சிறுநீர் கழித்து சைக்கோ வாலிபர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் பெரிய அளவில் கண்டுகொள்ளாததால் பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இது டெல்லியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகளை குறிவைத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் பரவலாக நடந்தேறி வருகிறது. காதலிப்பது போல் நடித்து கற்பழித்தல், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசத்தில் ஈடுபடுதல், காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது போன்ற என்னது கொடுமையில் மாணவிகளை குறிவைத்து அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகளின் ஆடைகளை கழட்டி சைக்கோ இளைஞர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் டெல்லி மாநகராட்சி பள்ளியில் நடந்துள்ளது. டெல்லியில் மாநகராட்சி பள்ளியில் ஏப்ரல் 30 அன்று இந்த கொடுமை நடந்துள்ளது, பள்ளி வகுப்பறைக்குள் ஒரு அடையாளம் தெரியாதா வாலிபர் திடீரென நுழைந்தார், அதன் பிறகு அங்கே ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த அந்த நபர் இரண்டு மாணவிகளை உள்ளே வைத்து கதவை பூட்டினான், இரண்டு மாணவிகளின் ஆடைகளை அகற்றினான். அதன் பின்னர் அவர்களின் முன்பு சிறுநீர் கழித்து அருவருப்பாக நடந்து கொண்டான். இதனால மாணவிகள் அலறினர், சிறிது நேரத்தில் அங்கிருந்து அந்த வாலிபன் தலைமறைவானான். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மாணவிகள் தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அதை அவர் அலட்சியப் படுத்தினார் தற்போது இந்த விவகாரம் டெல்லி மகளிர் ஆணையம் வரை சென்றுள்ளது. தனது கடும் அதிர்ப்தியை தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையம், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.