கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் என்ற கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக 16 பேரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துமனைகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லீம் ஓட்டுக்களை அள்ளி வெற்றி பெற்ற பாஜக - எப்படி தெரியுமா?
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்திற்குரியது.
இதையும் படிங்க: எல்லாமே மர்மம்.! கனிம வளங்கள் கொள்ளைக்கு தமிழக அரசின் பதில் என்ன? அன்புமணி ராமதாஸ் அதிரடி
கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. போதை பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.