மருத்துவ கழிவுகளை சாலையோரங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகீரங்க எச்சரிக்கை.

Published : Jun 10, 2021, 09:10 AM IST
மருத்துவ கழிவுகளை சாலையோரங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகீரங்க எச்சரிக்கை.

சுருக்கம்

தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மேலாக சேமித்து வைக்க கூடாது எனவும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மேலாக சேமித்து வைக்க கூடாது எனவும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம்.. மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் மருத்துவ கழிவுகள் முறையாக பிரித்து சேமித்து பொதுமருத்துவ சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.  

மேலும், தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மேலாக சேமித்து வைக்க கூடாது எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் மருத்துவ கழிவுகள் சாலையோரங்களில் கொட்டுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் மருத்துவ கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவது கடும் விளைவை ஏற்படுத்தும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எனவே அனைத்து மருத்துவமனைகள், கோவிட் பராமரிப்பு நிலையங்களில் உருவாகும் மருத்துவ கழிவுகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள நடைமுறைகளின் அடிப்படையில் அகற்ற வேண்டும் எனவும் இந்த விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!