குடிமகன்களுக்கு குட்நியூஸ்.. மதுபானங்கள் ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் கடும் நடவடிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 12, 2021, 3:33 PM IST
Highlights

 பல்வேறு கால கட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட போது இதுவரை 724 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தவிர கூடுதல் நேரத்தில் மது கடைகள் திறந்து வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் உடன் மின்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி;- பல்வேறு கால கட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட போது இதுவரை 724 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தவிர கூடுதல் நேரத்தில் மது கடைகள் திறந்து வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு மது விற்றால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். வருவாய் ஈட்டுவது நோக்கம் அல்ல. அரசுக்கு நல்ல பெயர் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றார். 

எந்த கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றாலும் அதற்கு அந்த மாவட்ட மேற்பார்வையாளர்தான் பொறுப்பு. ஒரு வாரத்திற்குள் மதுபானங்கள் விலைப்பட்டியல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேலாக விற்கப்பட்டால் அந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

click me!