இது பைத்தியக்காரத்தனம் நிறுத்துங்கள் ,டெல்லி மக்களிடம் முதல்வர் அரவிந்த் கெஸ்ரிவால்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 25, 2020, 10:31 PM IST
Highlights

டெல்லியில் நடந்து வரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
 

T>Balamurukan

டெல்லியில் நடந்து வரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின்பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில்  சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீஸார் தலையிட்டுத் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 நேற்று மட்டும் ஒரே நாளில் ஒருதலைமைக் காவலர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 3-வது நாளாகவும் கலவரம் தொடர்ந்தது. போலீஸார் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடியடி நடத்திக் கட்டுப்படுத்தினாலும் ஆங்காங்கே தொடர்ந்தது. கலவரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது. 150 போலீஸாருக்கும் மேலாகக் காயமடைந்தனர்.இதற்கிடையே டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் கலவரத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை  சந்தித்த பின் முதல்வர் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசும் போது, " கலவரத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும், துப்பாக்கி குண்டால் காயமடைந்தவர்களுக்கும் தரமான சிகிச்சை தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கலவரத்தைத் தடுத்து நிறுத்த முடியாததுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அனைவரிடம் கேட்பது என்னவென்றால், தயவு செய்து வன்முறையை நிறுத்துங்கள். இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசியுள்ளேன். போதுமான அளவு படைகளை அனுப்பக் கோரியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
டெல்லியில் தற்போது துணை ராணுவப் படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

click me!