மாட்டுக்கறி  சாப்பிடுவதை  நிறுத்துங்கள் !! மனிதர்கள் கொல்லப்படுவதும் நிறுத்தப்படும் ! எச்சரிக்கை விடுத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்…

 
Published : Jul 25, 2018, 08:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
மாட்டுக்கறி  சாப்பிடுவதை  நிறுத்துங்கள் !! மனிதர்கள் கொல்லப்படுவதும் நிறுத்தப்படும் ! எச்சரிக்கை விடுத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்…

சுருக்கம்

Stop eat Beaf and they will killed humans rss leader speech

மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஆங்காங்கே மனிதர்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் நின்றுவிடும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் அருகே பசுமாடுகளை ஏற்றிச் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்களை, பசு குண்டர்கள் கொடூரமாகத் தாக்கினர். இதில் ரக்பர் கான் என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

பசு குண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளை தாக்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில், நாடாளுமன்றம் தனிச்சட்டம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ரக்பர் கான் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததால், ராஜஸ்தான் மாநில பாஜக அரசு மீது, தற்போதுநீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்க்கட்சிகள் இப்பிரச்சனையை நாடாளுமன்றத் தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மாடாக இருப்பதில் இருக்கும்பாதுகாப்பு, மனிதராக இருப்பதற்கு இல்லையா? என்று தலைவர்கள் பலரும் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்தான், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் பேசியுள்ளஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ்குமார், ‘நாட்டில் பசுப் பாதுகாவலர்களால், பசுமாடுகளைக் கடத்திச் செல்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது;

மக்கள் பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஏன் இந்தக் குற்றம் நடக்கப்போகிறது?’ என்ற அதிர்ச்சிகரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். மேலும், ‘பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், அடித்துக்கொல்லும் குற்றம்,உள்ளிட்ட பல குற்றங்கள் தடுக்கப் படும்’ என்றும் அவர் மிகுந்த ஆணவத்துடன் கூறியுள்ளார். இந்திரேஷ் குமாரின் இந்தப் பேச்சுமீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!