15 தொகுதிகள் கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி! திருநாவுக்கரசரிடம் கறார் காட்டிய ராகுல் காந்தி!

First Published Jul 25, 2018, 8:07 AM IST
Highlights
Alliance with 15 constituency volunteers party


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் வரை கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி என்று திருநாவுக்கரசரிடம் ராகுல் காந்தி கறாராக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 பா.ஜ.கவை போல் காங்கிரசும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மாநிலம் தோறும் கூட்டணி அமைத்து போட்டி என்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். ஆனால் சீட் ஒதுக்கீட்டில் காங்கிரசின் பழைய பார்முலாவிற்கு ராகுல் நோ சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது எந்த ஒரு மாநிலத்திலும் பிராந்திய கட்சிகள் ஒதுக்கும் தொகுதிகளை பெற்று போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் இருக்க கூடாது என்பது தான் ராகுலின் புதிய பார்முலா.

 இந்த பார்முலாவை சாத்தியமாக்கும் வகையில் தற்போது முதலே அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட். இந்த அசைன்மென்ட் குறித்து ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களையும் நேரடியாகவே அழைத்து ராகுல் பேசி வருகிறார். அந்த வகையில் திருநாவுக்கரசரையும் செவ்வாயன்று சந்தித்துள்ளார் ராகுல்.

 அப்போது தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு எந்த ஒரு தனிப்பட்ட கட்சியையும் காங்கிரஸ் சார்ந்து இருக்க கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.கவாக இருந்தாலும் சரி, தி.மு.கவாக இருந்தாலும் சரி, தற்போது கட்சி ஆரம்பித்துள்ள கமல், தினகரனாக இருந்தாலும் சரி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிக்கு காங்கிரஸ் தயராகவே இருக்க வேண்டும். ஆனால் நாம் இருக்கும் அணி வெற்றிக்கூட்டணியாக இருக்க வேண்டும்.

 மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வேண்டும். இதற்கு தி.மு.க ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவர்களுடன் கூட்டணியை உறுதிப்படுத்தலாம். ஒன்று இரண்டு தொகுதிகளில் வேண்டுமானாலு காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம். இல்லை மிகவும் பேரம் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் காங்கிரசுக்கு 15 தொகுதிகளை தர தயாராக இருக்கும் தினகரனுடன் பேசவும் தயங்க வேண்டியதில்லை என்று ராகுல் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

 இதனை எல்லாம் கேட்டுக் கொண்ட திருநாவுக்கரசர் தற்போது தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை உள்ளது. எனவே காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும் என்று தினகரன் மிகவும் விருப்பமாக உள்ளார். அதே சமயம் தி.மு.கவும் நம் கூட்டணியை அதிகம் விரும்புகிறார்கள். எனவே நாம் துணிச்சலாக 15 தொகுதிகள் வரை தி.மு.கவிடம் கேட்டுப் பெற முடியும் என்று ராகுலிடன் கூறிவிட்டு வந்துள்ளார். மேலும் ராகுலின் அரசியல் நடவடிக்கைகளால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு விடிவு காலம் பிறக்கும் என்றும் திருநாவுக்கரசர் தன்னுடைய சகாக்களிடம் பேசி வருகிறார்.

click me!