மோடியை வீழ்த்துவதே லட்சியம்… பிரதமர் வேட்பாளர் பதவியை விட்டுக் கொடுக்கிறார்  ராகுல்…. எதிர் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா?

First Published Jul 25, 2018, 6:21 AM IST
Highlights
Opposite parties PM candidate Mamtha Or Mayawathi


மோடிக்கு எதிராக  புது வியூகம் அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி , மதச்சார்பற்ற யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்காக தனது பிரதமர் வேட்பாளர்  பதவியை ராகுல் காந்தி விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

2019 பாரளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மோடியை எதிர்க்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து கட்சிகள் மத்தியிலும் எழுகிறது.

இருப்பினும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதில் சில கட்சிகள் தயக்கம் காட்டுகிறது. மூன்றாவது கூட்டணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ் தொடர்ந்து பேசிவருகிறது.

ஆனால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்க மம்தாவிடம் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. மம்தாவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் டெல்லியில் அடிக்கடி முகாமிடுகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தரப்பிலிருந்து முக்கியமான  தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், இணக்கமான முறையிலான கூட்டணியென்றால் காங்கிரசுடன் இணைய தயார் என கூறிவிட்டது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் இந்துத்துவா  பின்புலம் இல்லாத யாரை வேண்டுமென்றாலும் பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார் என அக்கட்சியின் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

 2019-ல் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ், ஸ்திரமான கூட்டணியை  உருவாக்க வேண்டும் என்பதில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்புலம் இல்லாத ஒருவரை பிரதமர் வேட்பாளாராக ஏற்கவும் தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டணி அமைந்தால் எதிர்க்கட்சிகள் வரிசையில் பெண் ஒருவர் பிரதமர் ஆக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வழிவிடுவாரா என்ற நிலைப்பாட்டிற்கு, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேராத ஒருவரை பிரதமராக பார்க்க அவர் தயாராகவே உள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் வரிசையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற யூகங்கள் எழும் நிலையில் காங்கிரஸ் தரப்பு தகவல்களும் இதையே கூறிகிறது.

click me!