வண்டலூர் குட்டி சிங்கத்திற்கு பெயர் வைத்த எடப்பாடி! அது என்ன பெயர் தெரியுமா?

First Published Jul 24, 2018, 4:35 PM IST
Highlights
CM Edappadi palaniswami Vandaloor Park Lion as jaya name


தமிழக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 6 மாத பெண் குட்டி சிங்கத்திற்கு தனது தலைவியின் பெயர் "ஜெயா" என்று பெயர் சூட்டினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு அவை இனப்பெருக்கம் செய்து வருகின்றன. சிவா என்ற ஆண் சிங்கத்திற்கும், நீலா என்ற பெண் சிங்கத்திற்கும் 27.1.2018 அன்று பெண் சிங்க குட்டி பிறந்தது. இந்த பெண் சிங்கக்குட்டிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘‘ஜெயா’’ என்று பெயர் சூட்டினார்.

“நீலா என்ற பெண் சிங்கத்திற்கும், சிவா என்று ஆண் சிங்கத்திற்கும் பிறந்த 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு, புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியோடு, “ஜெயா” என்று பெயர் சூட்டப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மா விலங்குகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். இந்த உயிரியல் பூங்கா சிறந்து விளங்குவதற்காக பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 சிங்கங்கள் இருக்கின்றன, அதில் 10 பெண் சிங்கமும், 7 ஆண் சிங்கமும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 193 வகையான விலங்குகள் இருக்கின்றன. மொத்தம் 2410 விலங்குகள் இருக்கின்றது. அதோடு 46 வகையான பறவைகள் இந்த உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பார்வைக்காகவும், அவர்கள் கண்டுகளிப்பதற்காகவும் வண்டலுர் உயிரியல் பூங்காவில், விலங்குகளும், பறவைகளும் அரசால் சிறப்பான முறையிலே பேணிக்காத்து வளர்க்கப்பட்டு வருகின்றது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

இங்கே வருகின்ற சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக விரைவிலே காண்டாமிருகம் ஒன்று பீகார் மாநிலத்திலிருந்து பாட்னா மிருக காட்சி சாலையில் இருந்து பெறப்பட்டு நம்முடைய உயிரியில் பூங்காவிற்கு விரைவில் கொண்டுவரப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

click me!