ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விவகாரம்..! கனிமொழிக்கு திமுக தலைமை திடீர் கட்டுப்பாடு?

By Selva KathirFirst Published Apr 26, 2021, 10:56 AM IST
Highlights

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்க வேண்டும், கொடுக்க கூடாது என்று பிரச்சனை எழுந்துள்ள நிலையில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இந்த விவகாரத்தில் தொடர்ந்து எதையும் செய்ய வேண்டாம் என்று திமுக தலைமை கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 7ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போதைக்கு இந்தியாவின் ஒரு நாள் தேவை 5 லட்சம் மெட்ரிக் டன் தான். ஆனால் உற்பத்தியாகும் ஆக்சிஜனை கொண்டு செல்ல மற்றும் சேமித்து வைக்க போதுமான தளவாடங்கள் இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பிரச்சனையில் சிக்கியுள்ளன.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தங்களால் ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்க முடியும் என்றும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றம் சென்றது. மத்திய அரசும் நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் ஸ்டெர்லைட்டை ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்றமும் கூட வேதாந்தா நிறுவனத்தை அனுமதிக்காமல் தமிழக அரசே ஏன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.இந்த விவகாரத்தில் திமுக மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்துகளையும் கூறாமல் அமைதி காத்து வருகின்றனர்.

ஆனால் திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏன் செயல்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது, அதனை தமிழக அரசு ஏற்க கூடாது என்பது போல் ஒரு ட்வீட் செய்திருந்தார். உண்மையில் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குமாறு தமிழக அரசை கூறவில்லை, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் மேற்கொள்ளமாறே கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை கனிமொழி திரித்து ட்வீட் செய்ததாக புகார் எழுந்தது. மேலும இந்த விவகாரத்தில் திமுக தலைமை அமைதியாக இருக்கும் நிலையில் கனிமொழி கருத்து தெரிவித்ததும் விவாதத்திற்கு உள்ளானது.

ஆனால் இந்த ட்வீட்டிற்கு பிறகு கனிமொழி இந்த விவகாரம் தொடர்பாக கப்சிப் என்று ஆகிவிட்டார். இதற்கு காரணம் திமுக தலைமை ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவசரம் வேண்டாம் என்று அறிவுறுத்தியது தான் என்கிறார்கள். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை இயக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில்அதனை திமுக எதிர்த்தால் அது நெகடிவ் பிரச்சாரத்திற்கு வழிவகுக்கும் என்று திமுக கருவதாக சொல்கிறார்கள். எனவே தான் இந்த விவகாரத்தில் அமைதி காக்குமாறு கனிமொழி கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். அதே சமயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான தமிழக அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்வார் என்று திமுக தலைமைஅறிவித்துள்ளது.

click me!