சுட்டுக் கொல்லப்பட்டவர்களின்  உடல்களை  பதப்படுத்தி வைத்திருக்க வேண்டும்… இனிமேல்தான் இருக்கு போலீசுக்கு ஆப்பு…உயர்நீதிமன்றம் அதிரடி …

Asianet News Tamil  
Published : May 24, 2018, 07:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின்  உடல்களை  பதப்படுத்தி வைத்திருக்க வேண்டும்… இனிமேல்தான் இருக்கு போலீசுக்கு ஆப்பு…உயர்நீதிமன்றம் அதிரடி …

சுருக்கம்

sterlire shooting bodies kept in hopital high court order

தூத்துக்குடி கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்குப் பின்பு அவர்களது  உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸ் முயற்சி செய்து வரும் நிலையில் மறு உத்தரவு வரும் வரை அந்த உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மூலம் விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் இணைந்து பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் கோரிக்கை மனுவில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்க செல்லும் வழக்கறிஞர்களை தடுக்க கூடாது. தற்போது இடமாற்றம் செய்யப்பட்டள்ள மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணி செய்ய தடை விதிக்க வேண்டும். பலியானவர்கள் உடலை தனியார் மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்ற கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்தரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அம்ர்வு முன்வு விசாரணைக்கு வந்தது.

அப்போது 100 நாட்களாக போராட்டத்தை வழி நடத்தியவர்கள் குறிவைத்து சுடப்பட்டுள்ளனர். மிருகங்களை வேட்டையாடுவதை போல நடந்துள்ளனர். முழங்காலுக்கு கீழாக சுடவேண்டிய விதிகள் பின்பற்றபடவில்லை. அண்ணா நகரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது என வழக்கறிஞர் சங்கர சுப்பு வாதாடினார்.

இதனை கேட்ட நீதிபதிகள் வழக்கு கோரிக்கை, அரசின் வாதம் என அனைத்தும் சட்டத்திற்குட்பட்டுதான் இருக்கவேண்டும். நாங்கள் இங்கே உட்கார்ந்தால் அனைவரையும் சட்டத்தின் பார்வையில்தான் பார்க்கிறோம். நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது ஏதும் தெரியாமல் இங்கே உட்காருகிறோம் என நினைக்க வேண்டாம் என நீதிபதிகள் பொளந்து கட்டினர்.

உடற்கூறு ஆய்வு நடந்து முடிந்ததும்  மறு உத்தரவு வரும் வரை கொல்ப்பட்டவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இறந்தவர்களின் உடல்களை கட்டாயப்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் , தேவைப்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கு  சட்ட உதவிகள் வழங்க வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கு குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?
ஈரானை சிதறடிக்க டைம் குறித்த அமெரிக்கா.. பச்சை கொடி காட்டிய சவுதி அரேபியா.. துடிக்கும் இஸ்ரேல்..!