80  ரூபாயைத் தாண்டிருச்சு பெட்ரோல் விலை …. என்னதான் செய்யுறது….  பொங்கித் தீர்க்கும் பொது மக்கள்….

Asianet News Tamil  
Published : May 24, 2018, 06:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
80  ரூபாயைத் தாண்டிருச்சு பெட்ரோல் விலை …. என்னதான் செய்யுறது….  பொங்கித் தீர்க்கும் பொது மக்கள்….

சுருக்கம்

petrol price hike upto 80 rupees

பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சமாக லிட்டர் ஒன்றுக்கு 80 ரூபாயைத் தாண்டியுள்ளது. டீசல் 72 ரூபாய் 14 காசுகளுக்கு விற்பளை செய்யப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையில் 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல்தான் காரணம் என்ற கருத்து வெளிப்படையாக பரவியது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது. கடந்த 14-ந் தேதி பெட்ரோல் ரூ.77.61-க்கும், டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79-க்கும், டீசல் ரூ.71.87-க்கும் விற்பனை ஆனது.

இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை  தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55-க்கு விற்பனை செய்யப்பட்டு  வந்தது.

இந்நிலையில்  வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை இன்று  லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.42 க்கும், டீசல் ரூ.72.35 காசுகளுக்கும்  விற்பனையானது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.

கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.35-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?
ஈரானை சிதறடிக்க டைம் குறித்த அமெரிக்கா.. பச்சை கொடி காட்டிய சவுதி அரேபியா.. துடிக்கும் இஸ்ரேல்..!