இனியாவது திருந்துங்க... பாமக ராமதாஸ் கடும் எச்சரிக்கை..!

Published : Apr 09, 2020, 12:11 PM IST
இனியாவது திருந்துங்க... பாமக ராமதாஸ் கடும் எச்சரிக்கை..!

சுருக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் இனியாவது திருந்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழகத்தில் ஊரடங்கை மீறி வலம் வந்ததாக 1,24,657 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை. 97,146 வாகனங்கள் பறிமுதல். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக  காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இனியாவது  ஊரடங்கை மதித்து மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனையை இலவசமாக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. தனியார் மருத்துவமனைகளையும் இணைத்துக் கொண்டு கொரோனா சோதனைகளை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்; கொரோனாவை விரட்ட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணையப்போகிறேனா..? ஷாக் அப்டேட் கொடுத்த வைத்திலிங்கம்- அதிமுக டாக்டர் சரவணன்..!
ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது..! தம்பிதுரை மீண்டும் திட்டவட்டம்..!