கையிலெடுக்கப்போகும் எமெர்சென்ஸி காலத்திட்டங்கள்... மோடி எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 9, 2020, 11:35 AM IST
Highlights

நிலைமை இக்கட்டான சூழ்நிலை அடைந்தால் பிரதமர் எமெர்சென்ஸி காலத்தில் எடுக்கப்படுவது போன்று சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என தற்போது தெரியவந்துள்ளது. 

நாளை மறுநாள் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக்குப் பின்பு ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும் என்பது குறித்தும், ஏதேனும் விதிமுறைகள் தளர்வு இருக்கமா? என்பதும் தெரியவரும்.

ஆனால், நிலைமை இக்கட்டான சூழ்நிலை அடைந்தால் பிரதமர் எமெர்சென்ஸி காலத்தில் எடுக்கப்படுவது போன்று சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என தற்போது தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக  6 நாட்களில் மட்டும் இந்தியாவில் 2500 மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உறுதிப்படுத்த பட்டுள்ளனர்.

தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இன்னும் 1000 மேற்பட்டோர் நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் கண்டறியாமல் உள்ளனர். எனவே இவர்கள் மூலமோ அல்லது இவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் மூலமோ கொரோனா சமூக தொற்றாக மாறும் நிலைக்கு செல்லலாம் என அறிக்கை கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் கொரோனா தொற்று மூன்றாவது கட்டத்தை அடைந்தால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க யாரும் வெளியே வராத வண்ணம் அரசாங்க பணியாளர்கள் மூலம் விநியோகம் செய்ய அறிவுறுத்துவது, சுகாதார பணியாளர்கள் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது.

 தொற்று அதிகமானால் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுடன், அம்மருத்துவர்களையும் பணியில் ஈடுபடுத்த திட்டம் வைத்துள்ளார். இவற்றுடன் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்கும் விதத்தில் இராணுவ வீரர்களில் தனி பிரிவு பயிற்சி பெற்று வருவதாகவும் நிலைமை கைமீறும் பட்சத்தில் இவை நடைமுறைப்படுத்த பிரதமர் மோடி திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள், உயிரை பணயம் வைத்து கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபடும் நிலையில் சிலர் அவர்கள் மீதே தாக்குதல் நடத்தும் சூழலில் அதனை ஒடுக்கும் வகையிலும் பல்வேறு சட்டதிருத்தங்கள் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

click me!