டாப் கியரில் தேர்தல் ஆணையம்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது..? முக்கிய அப்டேட்..

By manimegalai aFirst Published Nov 24, 2021, 2:12 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ‘மறைமுகத் தேர்தலை விரைவாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இந்த மறைமுகத் தேர்தல் எப்போது நடத்தி முடிக்கப்படும்’ என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், தேவையில்லாத அழுத்தத்துக்கு அவர்கள் ஆளாகாத வகையில்பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும், போலீஸாருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளத்தாக அரசியல் வட்டாரத்தில் சில வாரங்களாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில் ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், சொந்த மாவட்டங்களில் அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும்  அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே விரைவில் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

 

click me!