கோபிசெட்டிபாளையம் அருகே இறந்து போன கணவன் மற்றும் தாயார் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததல் மகனுடன் ஒரு வார காலமாக வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த பரிதாபமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாடு முழுவதும் பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை முற்றிலுமாக அகற்றும் வகையில் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் கடந்த ஆண்டு வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது.
அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வந்தது. கடந்த ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலின்படி, 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு 101வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!
உலக பசி குறியீடு என்பது 2022ல் மிதமானதாக உள்ளது என்று கூறுகிறது. இந்த ஆண்டு உலக பசி குறியீடு 2022இல் 18.2ஆக உள்ளது. இது கடந்த 2014இல் 19.1ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. போர், காலநிலை மாற்றம், கொரோனா, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உலக பசிக் குறியீடு மோசமாக உள்ளது. அடுத்தாண்டு இன்னும் கூட உலக பசி குறியீடு மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே இறந்து போன கணவன் மற்றும் தாயார் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததல் மகனுடன் ஒரு வார காலமாக வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த பரிதாபமான சம்பவம் நடைபெற்றுள்ளது. கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி கனகாம்பாள் (80 வயது). இவருடைய மகள் சாந்தி(60).
சாந்திக்கு திருமணமான பின்பு கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார்(34), மகள் சசிரேகா என்ற மகளுடன் தாயார் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் குமணன் வீதி பகுதியில் உள்ள அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் அவரது கணவர் மோகனசுந்தரம் ஆகிய இரண்டு பேரும் அழகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தொடர்ந்து வீட்டினுள் அழகிய நிலையில் இறந்து கிடந்த இரண்டு பேரின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையின் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாததால் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாக சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் கணவர் இறந்து 7 நாட்கள் ஆனதாகவும் அம்மா இருந்து இரண்டு நாட்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்துள்ள சூழலில் அதே தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடித்து உள்ளது.
தற்போது நடக்க உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் போட்டி போட்டு கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது. ஒரே தொகுதியில் இரண்டு வெவ்வேறான சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. பட்டினி சாவு ஒரு பக்கம், கோடிக்கணக்கில் புரளும் ஈரோடு தேர்தல் ஒரு பக்கம் என்றும், இருக்கும் இந்த நிலை தான் அரசியல் கட்சிகளின் சாதனையா ? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க..அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம் மட்டுமல்ல.. சீனாவின் உளவு பலூனில் சிக்கிய இந்தியா.? அதிர்ச்சியில் உலக நாடுகள்
இதையும் படிங்க..ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்டேனா.? ஆடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சூர்யா சிவா!