ஸ்டாலின் வைத்த ஒற்றை கோரிக்கை.. தட்டாமல் செய்த ஓபிஎஸ்.. துரைமுருகனை தூக்கி வைத்து கொண்டாடினார்.

By Ezhilarasan BabuFirst Published Aug 23, 2021, 4:05 PM IST
Highlights

அப்போது துரைமுருகனுக்காக கொண்டுவந்த பாராட்டு  தீர்மானத்தின் மீது பேச விழைந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் தொடர்ந்து 10 முறை, சட்டமன்ற உறுப்பினராக இருப்பது சாமானியமான காரியம் அல்ல, சட்டபேரவையில் 50 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினர் என்பது நீண்ட நெடிய வரலாறு,

துரைமுருகன் அவர்களுடைய சட்டமன்ற வரலாறு நீண்ட நெடியது , அவர் அனைவரிடத்திலும் பாசமும் பரிவும் காட்டக் கூடியவர், எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுக அமைச்சர் துரைமுருகனை சட்டமன்றத்தில் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொடநாடு கொலை விவகாரம் அதன் மீதான விசாரணை தொடர்பான வாதங்கள் சட்டமன்றத்தை  அனல் பறக்க வைத்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றத் தொடங்கி 50 ஆண்டுகளை துரைமுருகன் நிறைவு செய்துள்ளார். அவரின் இந்த பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய உடன் துரைமுருகனை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா நாயகனாக துரைமுருகன் வலம் வருவதாக  கூறி பாராட்டினார்.  மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இடத்தில் இருந்து தம்மை துரைமுருகன் வழி நடத்துவதாகவும் ஸ்டாலின் பாராட்டினார். எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரது முகத்தில் எப்போதும் புன்னகைக்கு குறைவிருந்ததில்லை. துரைமுருகன் அவர்களை எப்போதும் கருணாநிதி அவர்கள் துரை துரை என்றுதான் அழைப்பார். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் எனக்கு அவர் வழிகாட்டியாக இருந்து வருகிறார் என நெகிழ்ந்து கூறிய ஸ்டாலின், கட்சிப் பாகுபாடு இன்றி பொன்விழா நாயகன் துரைமுருகனை அனைவரும் முன்வந்து இந்த பாராட்டு தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டுமென கூறினார். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினின் பேச்சைக் கேட்ட துரைமுருகன், ஆனந்தத்தில் கண் கலங்கினார். 

அப்போது துரைமுருகனுக்காக கொண்டுவந்த பாராட்டு  தீர்மானத்தின் மீது பேச விழைந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் தொடர்ந்து 10 முறை, சட்டமன்ற உறுப்பினராக இருப்பது சாமானியமான காரியம் அல்ல, சட்டபேரவையில் 50 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினர் என்பது நீண்ட நெடிய வரலாறு, சட்ட மன்றத்தில் எப்போதும் அவர் மற்றவர்களிடம் பாசமும், பரிவும் காட்டக் கூடியவர். ஒரே மாதிரியாக நடந்து கொள்ளக் கூடியவர், துரைமுருகன் அவர்கள் உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர், அவையில் காரசாரமாக அனல் தெறிக்க பேசுவார், ஆனால் உடனே தணிந்து இனிமையாக பேசுவார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் பேசினார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனை பாராட்டி ஓ. பன்னீர்செல்வம் அவையில் பேசியது அங்கிருந்த அனைவரையும் நெகழ்ச்சி அடைய வைத்தது.

 

click me!