உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் கொள்கை… எஸ்.பி.வேலுமணி விமர்சனம்!!

By Narendran S  |  First Published Dec 2, 2022, 11:36 PM IST

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் கொள்கை என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார். 


உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் கொள்கை என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார். திமுக அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அதிமுக சார்பில் உண்ணாவிரப்போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, கோவையில் சாலைகளை செப்பனிட வேண்டும்  என வலியுறுத்தி அதிமுக சார்பில் போராட்டம் அறிவித்த பிறகு நெடுஞ்சாலை துறை அமைச்சர் கோவை வந்தார். அதன் பிறகு சில இடங்களில் பேட்ச் போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கோவை மாவட்டம் முழுவதும் சாலைகளை செப்பனிட வேண்டும். கோவை அரசு மருத்துவமனை இஎஸ்ஐ மருத்துவமனை மேட்டுப்பாளையம் மருத்துவமனைகளில் மருந்துவ வசதி இல்லை. உடனடியாக அதை சரிபார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: இது உண்ணாவிரத போராட்டமா? இல்லை உண்ணும் போராட்டமா? வெளியான வீடியோவால் கட்சி தலைமை அதிருப்தி!!

Latest Videos

undefined

கடந்த ஒன்றரை வருடங்களாக கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகாவது திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு அத்திக்கடவு அவிநாசி திட்டம், அரசு  மருத்துவமனை மேம்படுத்தல், பாலங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுதல், ஆறு புதிய கல்லூரிகள், விமான நிலைய விரிவாக்கம் உள்ள என்னென்ன தேவையான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். எதாவது பதிலைச் சொல்லி நழுவாமல் கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்காமல் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் உதயநிதியை துணை முதலமைச்சராக்கலாம்.

இதையும் படிங்க: தொழில் வளர்ச்சியை முடக்கியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்… வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

அதிகாரம் அவரிடமே உள்ளது. அப்படி இருக்கும்போது அனைவரும் சேர்ந்து சொல்லி  செய்வது போன்று பாவனை காண்பித்து வருகிறார். அண்ணா துவங்கிய திமுக கட்சி இன்று குடும்ப கட்சியாக மாறி உள்ளது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்கள். அவரது வாரிசுகள் நிறைய பேர் இருக்கும்போது, அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பில்லையா? திமுக என்றால் இவர்களேதான் வரவேண்டுமா என்பது தான் கேள்வி. சட்டமன்றம் உள்ளிட்ட எங்கு பார்த்தாலும் உதய நிதி புராணம் தான் பாடுகிறார்கள். எப்படியாவது உதயநிதியை அமைச்சராக்க வேண்டும், அதன்பிறகு முதலமைச்சராக்க வேண்டும் என்பது தான் முதல்வர் ஸ்டாலினின் ஒரே கொள்கை என்று தெரிவித்தார். 

click me!