ஆக்சிஜன், உயிர் காக்கும் உபகரணங்களை உற்பத்தி செய்ய முன்வரவேண்டும்.. தொழில் நிறுவனங்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Published : May 19, 2021, 11:43 AM ISTUpdated : May 19, 2021, 12:01 PM IST
ஆக்சிஜன், உயிர் காக்கும் உபகரணங்களை உற்பத்தி செய்ய முன்வரவேண்டும்.. தொழில் நிறுவனங்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சுருக்கம்

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் தாரளமாக நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் தாரளமாக நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் தொழிற்துறையின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் Hyundai, Ashok Leyland, Saint Gobin, Renault, Daimler, TVS, India Cements, Sanmar Group, Bannari Amman உள்ளிட்ட 12  நிறுவனங்களின் அதிகாரிகால் தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். 

மேலும் பல்வேறு பெருந்தொழில் நிறுவனங்கள் கானொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னுரையாற்றிய முதலமைச்சர் , தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்தும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். குறிப்பாக ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய முதலமைச்சர், கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டெழ தொழில் துறையினரின் பங்களிப்பு முக்கியம் என கூறினார். 

மருத்துவ ஆக்சிஜனை கூடுதலாக உற்பத்தி செய்யவும், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கூடுதலாக உற்பத்தி செய்யவும் தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்கும் மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் துறையினர் தாராளமாக நிதி வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!