நாளை முதல் அதிரடி.. கொரோனாவை விரட்ட களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published May 19, 2021, 11:39 AM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை.

தினசரி பாதிப்பு 33,000ஐ தாண்டி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 350ஐ கடந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நாளை சேலம், ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளகிறார். அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை, ஆக்சிஜன் பயன்பாடு, படுக்கை வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கிறார். மேலும், 3 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!