என்னதான் தந்திரங்கள் செய்தாலும், உருண்டு புரண்டாலும் எடுபடாது... அறிக்கையில் தெறிக்கவிடும் ஸ்டாலின் ஸ்டாலின்

By sathish kFirst Published May 12, 2019, 1:35 PM IST
Highlights

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு ஆறுதலாக கூறியுள்ளார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு ஆறுதலாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பெரும்பான்மையை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் மைனாரிட்டி அதிமுக ஆட்சி ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் தன் படுதோல்வி பயத்தை உணர்ந்திருக்கிறது. கூடுதலாக, மே19 ஆம் நாள் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அதனால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவுதான், மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் மர்மமான முறையில் ஓர் அதிகாரி நுழைந்தது முதல், தேனி - ஈரோடு எனப் பல இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் வரையிலான அனைத்து மறைமுக செயல்பாடுகளும்” என்று விமர்சித்துள்ள ஸ்டாலின்,

மதுரை வாக்கு இயந்திர அறையில் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியானவுடன், சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், மற்றக் கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும்கூட அந்த இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், அதிமுக. வேட்பாளர் மட்டும் அது குறித்து அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை. தேனி, ஈரோடு போன்ற இடங்களிலும் இதே நிலைதான். இதிலிருந்தே ஆளுங்கட்சியினர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள், என்னென்ன ரகசியத் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இறுதியாக, “ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை திமுகவும் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என்பதை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன” என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

click me!