திமுக வேட்பாளருக்கு ஆதரவாக விருந்து வைத்து வேட்டை... எடப்பாடியை கதிகலங்க வைக்கும் அதிமுக அமைச்சர்..!

Published : May 12, 2019, 12:04 PM ISTUpdated : Jan 22, 2020, 06:23 PM IST
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக விருந்து வைத்து வேட்டை... எடப்பாடியை கதிகலங்க வைக்கும் அதிமுக அமைச்சர்..!

சுருக்கம்

 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பணியாற்றியவர்களுக்கு அவருடைய வீட்டில் அழைத்து விருந்து வைத்தார். அமைச்சர் பதவியை வைத்து அவர் கட்சிக்கே துரோகம் செய்து வருகிறார்.

அதிமுகவில் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த பகை நெருப்பு இப்போது கொளுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது. அதிமுகவை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் அழைக்கப்பார்ப்பதாக தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வெளிப்படையாகவே குற்றம்சாட்டி உள்ளார். 

தமிழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். ஈரோடு புறநகர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். தற்போது மாவட்ட செயலாளர் பதவி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வசம் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தோப்பு வெங்கடாசலத்துக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஈரோடு புறநகர் மாவட்டத்த்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கும், தற்போதைய மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.சி.கருப்பணனுக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தம். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அமைச்சர் கருப்பணன், தோப்பு வெங்கடாசலம் ஆகியோரை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்தது அதிமுக தலைமை. ஆனால் கருப்பணன் மீதுள்ள வெறுப்பால் அரவக்குறிச்சியில் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கிய தோப்பு வெங்கடாசலம் சூலூருக்கு சென்று தேர்தல் பணியாற்றி வருகிறார்.  

இந்நிலையில் பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’ மக்களவை தேர்தலில் திருப்பூர் தொகுதியில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர். அவருக்கு பெருந்துறை தொகுதி முழுவதும் நானும், அ.தி.மு.க.வின் அனைத்து தொண்டர்களும் தீவிரமாக வேலை செய்தோம்.

ஆனால், இந்த தொகுதியின் மாவட்ட செயலாளரும், மாவட்டத்தின் அமைச்சராக இருக்கும் கே.சி.கருப்பணன் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிக்கும் வேலையை விட்டு, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும், அ.ம.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகவும் அவரது ஆதரவாளர்களை இறக்கி விட்டார். இது இங்குள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும்.

தேர்தலின்போது பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்றுவிடக்கூடாது. அதன் மூலம் என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டார். அவர் மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்றது முதல் கட்சி தொண்டர்களை சந்திப்பது இல்லை. ஆனால், மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பணியாற்றியவர்களுக்கு அவருடைய வீட்டில் அழைத்து விருந்து வைத்தார்.

அமைச்சர் பதவியை வைத்து அவர் கட்சிக்கே துரோகம் செய்து வருகிறார். இதுபோன்றவர்களை கட்சிக்குள் வைத்திருக்கலாமா என்று கட்சி தலைமை முடிவு எடுக்க வேண்டும். அவர் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கட்சிக்கு எதிராக பணியாற்ற அவரது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆதாரத்துடன் சேகரித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவர்களது முடிவுக்காக பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கிறோம். கட்சியை அழிக்கப்பார்க்கும்போது எங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை’’ என அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்களுக்குள் இருந்த கோஷ்டி பூசல் வெளிப்படையாக கிளம்பி உள்ளது அதிமுக வட்டாரத்தில்ன் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!