கலைஞர் வீட்டில் ஸ்டாலின் எழுதிய குறிப்பேடு.. உணர்வுகளை உன்னதமாக கொட்டிய தலைவர்..!

Published : Sep 03, 2018, 05:43 PM ISTUpdated : Sep 09, 2018, 07:24 PM IST
கலைஞர் வீட்டில் ஸ்டாலின் எழுதிய குறிப்பேடு.. உணர்வுகளை உன்னதமாக கொட்டிய தலைவர்..!

சுருக்கம்

நாகை மாவட்டம் திருக்குவளை சென்ற திமுக தாலைவர் ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் நின்று தொண்டர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.திருச்சி சென்ற ஸ்டாலின் அங்கிருந்து நேரடியாக நாகை மாவட்டம் திருக்குவளை சென்றார். 

நாகை மாவட்டம் திருக்குவளை சென்ற திமுக தாலைவர் ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் நின்று தொண்டர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.திருச்சி சென்ற ஸ்டாலின் அங்கிருந்து நேரடியாக நாகை மாவட்டம் திருக்குவளை சென்றார். 

திருக்குவளையில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மாள் வீட்டிற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.

 கலைஞரின் தந்தை முத்துவேல், தாய் அஞ்சுகம் அம்மாள் மற்றும், முரசொலி ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த வருகையை தொண்டர்கள் வெகுவாக வரவேற்றனர்.

பெண்கள் ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.பள்ளி மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் ஸ்டாலினை வரவேற்றனர்.மேலும் அங்குள்ள ஒரு குழந்தைக்கு ஸ்டாலின் பெயர் வைத்த அற்புத நிகழ்வும் நடந்தது.

கலைஞரின் திருக்குவளை வீட்டில் உள்ள குறிபேட்டில் ஸ்டாலின் சில வரிகளை எழுதினார் அதில், "கலைஞர் அவர்களின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு, பல முறை வந்துள்ளேன்.. தலைவருடன் வந்துள்ளேன்.. தனியாக கூட வந்துள்ளேன்....இப்போது திமுக தலைவராக வந்துள்ளேன் என குறிப்பேட்டில் எழுதியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?