விமானத்தில் தமிழிசையுடன் வாக்குவாதம்..! கோஷத்தை எழுப்பி தனி கவனம் ஈர்க்க முயன்ற பெண்..!

By thenmozhi gFirst Published Sep 3, 2018, 4:22 PM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே பாரதிய ஜனதா கட்சியை  விமர்சனம் செய்வதும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் திட்டம் தீட்ட தொடங்கி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே பாரதிய ஜனதா கட்சியை  விமர்சனம் செய்வதும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில்  எப்படியாவது பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க  வேண்டும் என எதிர்கட்சிகள் திட்டம் தீட்ட தொடங்கி உள்ளது.

இந்நிலையில் குறிப்பாக தமிழகத்தில் பொறுத்தவரை  பாரதிய ஜனதா கட்சி மாநில கட்சியுடன் கூட்டணி வைத்து எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என  எண்ணுகிறது. இந்நிலையில் எந்த திட்டம் வந்தாலும் சரி, எவ்வளவு விலை உயர்ந்தாலும் சரி பாரதிய ஜனதா கட்சியை குறை சொல்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது  என்றே கூறலாம்.

இந்நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பெண் பயணி ஒருவர் வேண்டும் என்றே வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.விமானத்தில் பயணித்த தூத்துக்குடியை சேர்ந்த சோபியா என்ற பெண் பாஜகவை விமர்சித்த கோஷமிட்டார். இதனால்  இருவருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை, ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதலால் சோபியா பாஜகவை விமர்சித்திருக்கலாம் என்று  அவருக்கே உண்டான பெருந்தன்மையுடன் தெரிவித்து,அது ஒரு விஷயமாக கூட எடுத்துக்கொள்ளாமல் ஆகுற வேலையையில் மும்முரமாக இறங்கி விட்டார் தமிழிசை.

விமானத்தில் சக பயணியுடன் பயணம் செய்யும் போது,  இது போன்று தேவை இல்லாத செயலில் ஈடுபட்ட சோபியா என்ற பெண்ணை பார்த்து அனைவரும் அமைதியாக இருங்க என கூறி உள்ளனர். இந்த  சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!