
தேசிய நதிநீர் இணைப்பில் திட்டத்தில் பிரதமர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்றினால்தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நதிநீர் இணைப்பு திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக நநிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டியுள்ளதால், பிரதமர் மோடி உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றினால்தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், நதிகள் இணைக்கப்படுவதன் மூலம், விவசாயிகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது என்பது, அண்டை மாநிலங்களின் எதேச்சதிகாரமாக உள்ளது என்றும், அண்டை மாநிலங்களுக்கிடை அமைதி, ஒற்றுமை போன்றவை வளரும் எனவும் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.