
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசை கழட்டிவிட , மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அதே போல, விடுதலை சிறுத்தைகளையும் வெளியேற்ற நினைக்கிறார் ஸ்டாலின். வட தமிழகத்திலுள்ள திமுகவின் மா.செ.க்கள் பலரும் இந்த கோரிக்கையை ஸ்டாலினிடம் முன் வைக்கிறார்கள்.
சிறுத்தைகளை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் 2 ஓட்டுக்கள் நமக்கு கிடைக்கும் ; ஆனா, 4 ஓட்டுக்கள் நம்மை விட்டுப் போகும் என காரணங்களை ஸ்டாலினிடம் ஒப்புவித்து வருகிறார்கள். ஸ்டாலினின் கிச்சன் கேபினெட்டும் இதையேத்தான் நினைக்கிறது. இந்தநிலையில், சிறுத்தைகளை உதறிவிட்டு பாமகவை கையிலெடுக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார்.
இதற்கு காரணம், அன்புமணியின் முதல்வர் கனவையும் கலைத்து விடலாம் ; சிறுத்தைகளை சமாளிக்க பாமகவின் வாக்குவங்கி சமாளிக்கும். கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் 500 முதல் 1500 வாக்குகளில் தான் பாமக தோற்றிருக்கிறது. அந்த இடங்களில் திமுக , அதிமுக ஜெயித்துள்ளது. ஆனா. இந்த முறை அப்படியிருக்காது. அந்த இடங்கள் பாமகவுக்கு வெற்றியை கொடுக்கலாம். எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால் மக்களுக்கான பணிகளை திமுகவினரால் செய்ய முடியாததால் நம் எம்.எல்.ஏ.க்களுக்கு மக்களிடம் அதிர்ப்தியிருக்கிறது.
அதனால் பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டுவரலாம் என ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள் திமுகவின் சீனியர்கள். இதணையடுத்து, பாமகவை இழுக்கும் ரகசிய அசைன்மெண்ட் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். அவரும் அன்புமணியிடம் பேசி வருகிறார். திமுக கூட்டணியில் இணைய அன்புமணிக்கு விருப்பம் இருந்தாலும் டாக்டர் ராமதாஸ் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் துவங்கியநிலையிலேயே பேச்சுவார்த்தைக்கு சற்று இடைவெளிவிட்டிருக்கிரது திமுக.