காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுங்கள்..! திமுகவினருக்கு உத்தரவிட்ட ஸ்டாலின்..!

By Manikandan S R SFirst Published Sep 29, 2019, 9:09 AM IST
Highlights

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள் கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

திமுக கூட்டணி சார்பாக நாங்குநேரியில் காங்கிரஸும், விக்ரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனோகரன் வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனுக்கு ஆதரவாக அக்டோபர் 9,10,15,16 ஆகிய தேதிகளில் சுற்று பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவித்தார்.

கரெக்சன், கலக்சன், கமிஷன் என அதிமுக அரசின் செயல்பாடுகளை முன்னிறுத்தி இடைத்தேர்தலில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வோம் என தெரிவித்தார். மேலும்  காங்கிரஸ் சார்பாக அமைக்கப்படும் தேர்தல் குழுவுடன் இணைத்து திமுக இணைந்து செயல்படும் என்றார்.

click me!