நானும் சொல்றேன் “ பாஜக வின் பாசிச ஆட்சி ஒழிக” … அதிரடியா ட்வீட் போட்ட ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Sep 4, 2018, 8:26 AM IST
Highlights

சோபியா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடிவடிக்கை கண்டனத்துக்குரியது என குறிப்ட்டுள்ளார். இப்போது நானும் சொல்கிறேன் “ பாஜக வின் பாசிச ஆட்சி ஒழிக” என்று  டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் எத்தனை லட்சம் பேரை உங்களால் கைது செய்ய முடியும் என சவால் விடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இன்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில்  அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண் பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனை அடுத்து,  தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர், அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். 

விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா  என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

சோபியா கைது செய்யப்பட்டதற்கு தமிழக்ம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சமூக வலை தளங்களில் பதவிட்டுள்ள நெட்டிசன்கள் “ பாஜக வின் பாசிச ஆட்சி ஒழிக” என தொடர்ந்து பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சோபியா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடிவடிக்கை கண்டனத்துக்குரியது என குறிப்ட்டுள்ளார். இப்போது நானும் சொல்கிறேன் “ பாஜக வின் பாசிச ஆட்சி ஒழிக” என்று  டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் எத்தனை லட்சம் பேரை உங்களால் கைது செய்ய முடியும் என சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து இதே போன்று பலர் தமிழிசையின் செயலுக்கு கண்டனமும், சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்

 

click me!