தமிழிசையை கைது செய் !! சோபியாவின் தந்தை அதிரடி புகார் … என்ன செய்யப் போகிறது போலீஸ்?

Published : Sep 04, 2018, 07:54 AM ISTUpdated : Sep 09, 2018, 08:08 PM IST
தமிழிசையை கைது செய் !! சோபியாவின் தந்தை அதிரடி புகார் … என்ன செய்யப் போகிறது போலீஸ்?

சுருக்கம்

பொய் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெளியே அடியாட்களை கொண்டு தங்கள் குடும்பத்தினரை மிரட்டிய தமிழக பாஜக தலைவர் தமிழிசையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சோபியாவின் தந்தை தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பாஜக ஒழிக என கோஷமிட்டார்.

இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர், 

விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவர் சாமி என்பவரின்  மகள் சோபியா என்பதும், அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே தன்னையும், மகள் சோபியா மற்றும் தங்களது குடும்பத்தினரை தமிழிசையும் பாஜகவினரும் தொடர்ந்து மிரட்டி வருவதாக குற்றம சாட்டியுள்ளார்.. இதையடுத்து டாக்டர் சாமி புதுக்கோட்டை காவல் நிலையில் தமிழிசையை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை  இது வரை போலீசார் பதிவு செய்யவில்லை.

 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?