கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி …

Published : Sep 04, 2018, 07:24 AM ISTUpdated : Sep 09, 2018, 07:55 PM IST
கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி …

சுருக்கம்

பாஜகவை எதிர்த்து  முழக்கமிட்டு கைது செய்துபட்ட சோபியாவுக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பாஜக ஒழிக என கோஷமிட்டார்.

இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர், 

விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும், அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!