செங்கோட்டையனின் முகத்திரையை கிழித்த மு.க.ஸ்டாலின் - வேகமெடுக்கிறார் தோப்பு வெங்கடாச்சலம்...

 
Published : Jun 20, 2017, 02:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
செங்கோட்டையனின் முகத்திரையை கிழித்த மு.க.ஸ்டாலின் - வேகமெடுக்கிறார் தோப்பு வெங்கடாச்சலம்...

சுருக்கம்

Stalin tore the real face of sengottayian

அமைச்சர் செங்கோட்டையனுக்கும், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் இடையே நிலவி வந்த அரசியல் பகை தற்போது கொளுந்திவி்ட்டு எரியத் தொடங்கியிருக்கிறது.

மாண்புமிகு என்ற மரியாதை தராததால், தனிக்காட்டு ராசாவாக பெருந்துறையிலும், சட்டமன்றத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் மீது பல விமர்சனங்களை முன்வைத்து வரும் தோப்பு, இந்த முறை ஸ்டாலினின் பேச்சை கோட் செய்து செங்கோட்டையனை வகை தொகையில்லாமல் வறுத்தெடுத்திருக்கிறார்.

விடுமுறைக்குப் பிறகு நேற்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத் தொடரில், குதிரை பேர விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முன்னிலைப்படுத்தினார். வேண்டும் வேண்டும் விவதாம் வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கூறிய ஸ்டாலின், செங்கோட்டையனின் பேச்சுக்கு பதில் அளித்தார். “எத்தனை முறை என்னிடம் பேசினீர்கள்” என்பதை மறந்துவிட்டீர்களா?என்று பேச அவையே சில நிமிடம் நிசப்பதமானது. ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பதில் அளிக்கமுடியாமல் செங்கோட்டையனும் ஏதோ சமாளித்தார்.

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் தான் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சையும் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தனிபால் அறிவித்தார்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் இருக்கையில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், இதில் இருந்து அதிமுகவுக்கு செங்கோட்டையன் எவ்வளவு பெரிய துரோகத்தை செய்திருக்கிறார் என்பது  வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. 

தான் யோக்கியன் என சட்டமன்றத்தில் பேசிய செங்கோட்டையனின் முகத்திரையை ஸ்டாலின் கிழித்தெறிந்திருக்கிறார். அதிமுக ஆட்சியை தாங்கிப் பிடிக்கும் தூண் என செங்கோட்டையன் பேசுவதெல்லாம் வெறும் பகட்டு. அவையின் மரியாதை, மாண்பு கருதி ஸ்டாலின் இரண்டு வார்த்தைகளோடு முடித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 25 முறை செங்கோட்டையன் பேசியது பாவம் அப்பாவி தொண்டர்களுக்குத் தெரியாது. இப்படியாக தனது ஆதரவாளர்களிடம் மனம் திறந்து மழை போல தனது ஆதங்த்தை கொட்டி இருக்கிறார் தோப்பு வெங்கடாச்சலம்….

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்