விசாரணை கமிஷனே இப்பதான் அமைச்சிருக்கீங்க... விஷமிகள் ஊடுருவல் என்று எப்படி சொல்லலாம்... கேள்வி மேல் கேள்வி கேட்டு நசுக்கிய ஸ்டாலின்

First Published May 29, 2018, 1:28 PM IST
Highlights
stalin to ask question against police firing


முதல் நாள் சட்டமன்ற கூட்டம் இன்று கூடியுள்ள் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தமிமூன் அன்சாரி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் புகைப்படம் கொண்ட சின்ன பேனரை கையில் பதாகை போல் தூக்கி வந்தார். எதிர்கட்சிகளின் சட்டமன்ற வருகையே தடாலடியாக இருந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தார் முதல்வர்.

தூத்துகுடி சம்பவம் தொடர்பான ஐந்து பக்க விவர அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. வன்முறையை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர். நெருக்கடி கொடுக்க சில அமைப்புகள் சட்ட ஒழுங்கு பிரச்சனை முன்னெடுத்தன. கண்ணீர்  புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் கூட்டம் கலையாததால் நடவடிக்கை. போராட்ட குழுவினருடனர் சில அரசியல் கட்சிகளும் கை கோர்த்தன. விஷமிகள் சிலர் ஊடுருவி கல்லெறிதல் வாகனத்திற்கு தீ வைத்தல் போன்ற செயல்களை செய்தனர் என்றும் கூறினார். தூத்துக்குடியில் அமைதி நிலவ மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில் ’துப்பாக்கி சூடு’ என்கிற வார்த்தை இடம்பெறவே இல்லை. மாறாக காவல்துறையின் நடவடிக்கை என்றே குறிப்பிட்டுள்ளார். இதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையோ அல்லது காயமுற்றவர்களின் எண்ணிக்கையோ குறிப்பிடவில்லை.

இது குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின் இது ஒரு படுகொலை ஆனால் துப்பாக்கி சூடு என்கிற வார்த்தையை கூட முதலவர் அறிக்கையில் இல்லாதது ஏன்? என கேட்டிருந்தார். ஆனால் முதல்வர் வெளியிட்ட விவர அறிக்கையில் போரட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மத்தியில் சமூக விரோதிகள் விஷமிகள் ஊடுருவியுள்ளனர் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். ஒரு நபர் தலைமையில் விசாரணைக்குழுவிற்கு  ஆணையிட்டுள்ள நிலையில் எந்த ஒரு விசாரணையும் இன்றி முதல்வரே அவர்களே சமூகவிரோதி என்று மக்கள் போராட்டத்தை குறிப்பிடலாம். என குற்றம்சாட்டியுள்ளார் ஸ்டாலின்.

துப்பாக்கி சூடு என்கிற வார்த்தையை குறிப்பிடாத போது சமூக விரோதிகள், விஷமிகள் ஊடுருவல் என மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக சட்டமன்ற கூட்டம் அமைந்துள்ளது கண்டிக்க தக்கது என எதிர்க்கட்சிகள் பலரும் தங்கள் கண்டனங்களை கூறிவருகின்றனர்.

click me!